ட்வீட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பதிவு செய்கிறார்கள்? – ஆய்வு முடிவுகள் வெளியீடு!

ட்வீட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன.

சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  ட்வீட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது. இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10 நகரங்களில் பெண்கள் வெளியிட்ட 5 லட்சத்து 22 ஆயிரத்து 992 பதிவுகளும் ஆராயப்பட்டன. இதில் பெண்கள் டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவது தெரியவந்துள்ளது. பெண்களின் டுவிட்டர் பதிவுகள் 9 பொருளை பிரதானமாக கொண்டுள்ளன.

பெண்களின் டுவிட்டர் பதிவுகளில் 24.9 சதவீதம், பேஷன், புத்தகங்கள், அழகு குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சாப்பாடு பற்றி அமைந்துள்ளன. மேலும் நாட்டு நடப்புகள் பற்றி 20.8 சதவீத பதிவுகள் அமைந்திருக்கின்றன. அதேபோல் கொண்டாட்ட தருணங்கள் தொடர்பாக 14.5 சதவீத பதிவுகள் செய்யப்படுகின்றன. சமூகம் தொடர்பாக 11.7 சதவீத பதிவுகளும், சமூக மாற்றங்கள் குறித்து 8.7 சதவீத பதிவுகளும் உள்ளன.

டுவிட்டரை பொறுத்தமட்டில் அன்றாட உரையாடல்கள், கொண்டாட்ட தருணங்கள்தான் அதிகபட்ச லைக்குகளையும், பதில்களையும் பெறுகின்றன. நகரங்களில் சென்னை நகரத்தில்தான் கொண்டாட்ட தருணங்கள் பற்றி அதிகமாக பெண்களால் டுவிட்டர் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. சமூகம், சமூக மாற்றம் பற்றி பெங்களூரு பெண்கள் பதிவுகளை வெளியிடுகின்றனர். கவுகாத்தி பெண்கள் பேஷன் பற்றியும், விருப்பங்கள் குறித்தும், நாட்டு நடப்பு பற்றியும் பதிவுகளை வெளியிடுகிறார்கள் என ஆய்வு முடிவில் தகவல் வந்துள்ளது என ஆர்வளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *