மும்பையை பந்தாடிய சென்னை அணி!

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ. பி.எல். கிரிக்கெட்டின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அமீரகத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது

முதலில் டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் தோனியின் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். முதலில் பாப் டு பிளிஸ்சிசும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு காரணமாக சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தன. பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 156 ரன்கள் சேர்த்தது. கெய்க்வாட் 58 பந்துகளுக்கு, 9 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து மொத்தம் 88 ரன்கள் குவித்தார்.

பின்னர் 157 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு சென்னை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். 20 ஓவர்களில் மும்பை அணியால் 8 விக்கெட்டுக்கு 136 ரன்களை எடுக்க முடிந்தது. மும்பை அணியின் பேட்ஸ்மேனான பொல் லார்ட் ஹேசில்வுடின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனதும் சென்னை அணியின் கை முழுமையாக ஓங்கியது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடக்க லீக்கில் மும்பை இடம் அடைந்து தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.
