தொடர்ந்து 5வது வெற்றி… ஐதராபாத்தை அலறவிட்ட சிஎஸ்கே!
டெல்லியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைத் தோற்கடித்தது.
டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபில் போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஒவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 75 ரன்களையும், டூ பிளஸ்சிஸ் 56 ரன்களையும் எடுத்து அசத்தியதோடு, கடைசி நேரத்தில் 18.3 ஒவர்களில் வெற்றி இலக்கை எட்டிய சென்னை அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.