கவலைப்படமா விளையாடுங்க…உங்கள வீட்டுக்கு பத்திரமா நாங்க அனுப்பி வைக்கிறோம்!

ஐபிஎல் 14-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா இரண்டாம் அலையின் அச்சத்தால் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கமால் போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரிப்பதால் வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டு பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இதனையடுத்து மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய அரசு ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்களுக்கென தனி விமானம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் யாரும் தாயகம் திரும்புவது குறித்து கவலைப் பட வேண்டாம் என பிசிசிஐ கூறியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப் படுவர் எனவும் பிசிசிஐ உறுதியளித்துள்ளது. எனவே, வீரர்கள் யாரும் அச்சம் கொள்ளாமால் போட்டிகளில் விளையாடுமாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமான சேவையை ஆஸ்திரேலியா ரத்து செய்ததையடுத்து இந்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *