வெற்றி நடை போடும் பெங்களூரு அணி
இந்தியாவில் 14 ஆவது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று, மும்பையில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.
இதில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.
16.3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதம் அடித்த தேவ்தத் படிக்கல் ஆட்ட நாயகனாக தேர்வி செய்யப்பட்டார்.
நேற்றைய வெற்றியின் மூலம், 4 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.