ஒரு வழியா முதல் வெற்றியை பதிவு செஞ்சாச்சு… பெருமூச்சு விடும் ஐதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது அந்த அணி. இதற்கு முன்னதாக விளையாடி இருந்த மூன்று போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவி இருந்தது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத். ஆனால், பஞ்சாப் அணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.