இப்ப செய்ததை அப்பவே பண்ணிருக்கலாம்ல தோனி!

நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. ருத்துராஜ் களத்தில் இறங்கிய வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு தூக்குதுரை டூ பிளெஸ்சிசும், மொயீன் அலியும் அதிரடி காட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர்கள் இருவரும் பராக்கிடம் கேட்ச் கொடுத்து பறந்து போக, ரெய்னா, ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 6வது விக்கெட்டு களமிறங்கினார் கேப்டன் தோனி, திவேட்டியா வீசிய 14வது ஓவரில் பின்னாடி தட்டி விட்டு முன்னாடி ஓட, எதிர்திசையில் நின்ற ஜடேஜா வேண்டாம் கேப்டன் என்று எச்சரிக்க, பந்து கீப்பர் சஞ்சுவின் கைகளில் வந்தது. அடுத்த நொடியே ஒரே பாய்ச்சலாக பாய்ந்த கேப்டன் தோனி மீண்டும் தனது பிட்னஸை உறுதி செய்து அவுட்டிலிருந்தும் தப்பித்தார்.

இதனையடுத்து டிவிட்டரில் காரசார பொருளானார் கேப்டன் தோனி. கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் தோனி ரன் அவுட் ஆனதால் இந்தியா தோற்றது. அதில் மட்டும் டைவ் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பதோடு, கோப்பையையும் கைப்பற்றி இருக்கலாம்.

இந்த நிலையில் நேற்று அடித்த தோனியின் டைவ், பலருக்கும் பழையதை ஞாபகப்படுத்த, என்ன தோனி இந்த டைவ அப்பவே அடிச்சிருக்காலம்ல என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *