சுரேஷ் ரெய்னாவின் சுயசரிதை நூல் வெளியீடு!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாறு இன்று வெளியிடப்பட்டுள்ளது.தனது கிரிக்கெட் வாழ்க்கை அனுபவங்களை சுய சரிதை நூலாக எழுதியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
அவரது இந்த சுய சரிதை “பிலீவ்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள்,226 ஒருநாள் போட்டிகள்,78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.தற்போது சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருகிறார்.
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் சில மாதங்களுக்கு முன் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.