சிஎஸ்கே-வின் புதிய ஜெர்சி அறிமுகம்
2021-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய ஜெர்சியில் ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக ராணுவ சீருடையின் வண்ணத்தை அணி நிர்வாகம் சேர்த்துள்ளது.தன்னலமற்று உழைக்கும் ராணுவத்தை பெருமைப்படுத்தும் விதமாக இந்த முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் தோனி ராணுவத்தில் சிறப்பு பதவிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.