அர்ஜூன் டெண்டுல்கருக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயம்

14 ஆவது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஏலத்தில் உள்நாட்டு, சர்வதேச வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தற்போது, இந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

21 வயதான அர்ஜூன் டெண்டுல்கர், ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளார்.  எட்டு அணிகளில் எந்த அணி இவரை சொந்தமாக்கிக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *