தெலங்கானா தேர்தல்: 64.26 சதவீதம் வாக்குப்பதிவு

Election

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நடந்த  வாக்குப்பதிவு  இரவு 7 மணி வரை  64.26 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் அதிகப்பட்சமாக மெதக் மாவட்டத்தில்  82.05 சதவீதமும், ஹைதராபாத்தில் 40.88 சதவீதம் பதிவானது. தொடர்ந்து 5 மணிக்கு மேல் வரிசையில் இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்து வருகிறது. 

எனவே வரிசை உள்ள அனைவரும் வாக்குபதிவு செய்து முடிய மேலும் 1 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நடந்த சில சம்பவங்களைத் தவிர வாக்குப்பதிவு அமைதியாக முடிந்ததுவாக்குப்பதிவு முடிந்த இடங்களில்  சீல் வைக்கப்பட்ட  வாக்கு இயந்திரம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த வாக்குகள் அனைத்தும் 3 ம் தேதி எண்ணப்பட்டு யார் ஆட்சி அமையும் பொது மக்கள் யாருக்கு பட்டம் கட்டுவார்கள் என தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *