காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி தெலுங்கு , தமிழ் உள்ளிட்ட பல படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமா துறைக்கு பிறகு அரசியலில் களம் இறங்கி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். எம் பி ஆகவும் இருந்த விஜயசாந்தி கடைசியாக பாஜகவில் தொடர்ந்து இருந்து வந்தார். 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருந்து ஆர்வம் காட்டாமல் இருந்த விஜயசாந்தி தெலுங்கானாவில் 30 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக விஜயசாந்தி பாஜகவில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை மேலும் நட்சத்திர பேச்சாளருக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு வெளியிடப்படவில்லை. 

இதனால் பாஜக மீது அதிருப்தியில் இருந்த விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் நடந்து வந்தது காங்கிரஸ் கட்சியினரும் இதனை உறுதிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு  பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்த நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

அவருக்கு காங்கிரஸ் கட்சியின் கொடியை போர்த்தி கட்சியில் இணைத்துக் கொண்டார்.ப்இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா பொறுப்பாளர் வேணுகோபால், மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பட்டி விக்ரமார்கா மற்றும் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *