ஜார்க்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் மர்ம பலி… பரபரப்பில் போலீசார்
ஜார்க்கண்ட் மருத்துவக்கல்லூரி மாணவனின் உடல் சொந்த ஊரான வேலக்கவுண்டம் பட்டி க்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மாணவனின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆட்சியர் டாக்டர் உமா உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் மதன்குமார், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள RIMS மருத்துவக்கல்லூரி விடுதியில் எரிந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
அவர் முதுநிலை தடயவியல் மருத்துவம் 2 ம் ஆண்டு படித்து வந்தார். இது தொடர்பாக அம் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டது.
அவரது சொந்த ஊரான வேலக்கவுண்டம் பட்டி க்கு இன்று காலை கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி க்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆட்சியர் டாக்டர் உமா உள்ளிட்டோர் மாணவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.