திருப்பதி வி.ஐ.பி. தரிசனத்திற்காக ஐ.டி பொறியாளர் செய்த அதிர்ச்சியான செயல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி போலி ஐடி கார்ட் மூலம் தேவஸ்தான அதிகாரிகளை ஏமாற்றி வி.ஐ.பி. தரிசனம் செய்த வழக்கில் மென்பொருள் பொறியாளரை கைது செய்த போலீசார்  

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவை ஸ்ரீநிவாசா நகர் பேங்க் காலனியை சேர்ந்த ஸ்ரீனிவாச பாரத் பூஷன் 52 என்பவர்  மென்பொருள் பொறியாளராகப் பணி புரிந்து வருகிறார். இவர்  அமலாக்க இயக்குநரகத்தில் வருமான வரி ஐ.ஆர்.எஸ். அதிகாரி என போலி ஐடி கார்ட் தயார் செய்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு சமர்பித்து  நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கடந்த 19 ம் தேதி நடந்த  கருடசேவையில் விஐபி பாஸ் மற்றும் 20 ம் தேதி அன்று  புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனத்திற்கான டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்தார். 

இவர் சமர்பித்த ஐடி கார்ட்டில் சந்தேகம் அடைந்த தேவஸ்தான அதிகாரிகள் விசாரித்ததில்  அவர் சமர்பித்தது போலி ஐடி கார்ட் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திருமலை முதலாவது நகர  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார்  வழக்கு பதிவு செய்து ஸ்ரீனிவாச பாரத் பூஷனை நேற்று கைது செய்தனர். 

இதுபோன்று மோசடி ஆவணங்கள், ஐ.டி.கார்ட் சமர்பித்து மோசடி செய்தால்  அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  கூடுதல் எஸ்.பி. விமலகுமாரி  தெரிவித்தார். இதில் டி.எஸ்.பி. பாஸ்கர் ரெட்டி, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஜெகன் மோகன் ஆகியோர்  உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…