‘மக்கள்தான் என் பலம், தைரியம்’ சிறையிலிருக்கும் சந்திரபாபு நாயுடு உறுக்கமான கடிதம்

விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன் சிறையில் இருந்து கடிதம் வெளியிட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை ராஜமுந்திரி சிறையில் சென்று அவரது மனைவி புவனேஸ்வரி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பொது மக்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் சந்திரபாபு கூறுகையில் நான் சிறையில் இல்லை.  உங்கள் அனைவரின் இதயங்களிலும் இருக்கிறேன்.  மக்களே என் குடும்பம் சிறைச் சுவர்களுக்குள் அமர்ந்து சிந்தித்தால் 45 ஆண்டுகால பொதுவாழ்க்கை தான் என் கண் முன்னே நகர்கிறது.  தெலுங்கு மக்களின் வளர்ச்சி மற்றும் நலனே எனது முழு அரசியல் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. இதற்கு நீங்களும் கடவுளுடன் சாட்சியாக இருக்கிறீர்கள்.

தோல்வி பயத்தில் என்னை சிறைச் சுவர்களுக்குள் அடைத்து, மக்களிடம் இருந்து என்னை பிரித்து  வைத்ததாக நினைக்கிறார்கள்.  நான் உங்களுடன் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் நான் வளர்ச்சி வடிவில் எங்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறேன்.  பொதுநலன் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் நினைத்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் கூட மக்களிடம் இருந்து என்னை ஒரு நிமிடம் கூட பிரித்து வைக்க முடியாது. ஆளும் கட்சியினர் சதித்திட்டங்களால் என் மீது ஊழல் முத்திரையைப் பதிக்க முயன்றனர், ஆனால் நான் நம்பும் மதிப்புகள் மற்றும் நம்பகத்தன்மையை ஒருபோதும் அழிக்க முடியாது. 

இந்த இருள் தற்காலிகமானது. சத்தியத்தின் சூரியனுக்கு முன் கரும் மேகங்கள் சிதறடிக்கப்படும். இந்த சங்கலிகள்  எனது கொள்கையை  பிணைக்க முடியாது. சிறைச் சுவர்களால் என் தன்னம்பிக்கையை அழிக்க முடியாது.  சிறை என்னை மக்களிடமிருந்து விலக்கி வைக்க முடியாது. நான் தவறு செய்ய மாட்டேன், செய்யவும் விடமாட்டேன்.  

இந்த தசராவுக்கு முழு அளவிலான தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன் என்று ராஜமகேந்திராவரம் மகாநாட்டில் அறிவித்தேன்.  ஆனால் நான் அதே ராஜமகேந்திராவரம் சிறையில் அடைக்கப்பட்டேன்.  விரைவில் நான் வெளியில் வந்ததும் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன்.  எனது மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இரட்டிப்பு உற்சாகத்துடன் பணியாற்றுவேன்.

நான் இல்லாத இந்த இக்கட்டான நேரத்தில் மக்களிடம் சென்று அவர்கள் சார்பாக போராடுமாறு மறைந்த  நந்தமுரி தாரகராம ராவ் அவர்களின் மகளும் எனது மனைவியுமான புவனேஸ்வரியிடம் கேட்டுக் கொண்டேன்.  அவள் ஒப்புக்கொண்டார்.  நான் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை அறிந்து இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ‘உண்மை வெல்ல வேண்டும்’ என்று உங்களிடம் புவனேஸ்வரி  அனுப்பி வைக்கின்றேன்.

மக்கள்தான் என் பலம், மக்கள்தான் என் தைரியம்.  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எனக்காக பல்வேறு வழிகளில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என் நல்வாழ்வுக்காக சாதி, மதம், பிரதேசம் தாண்டி நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் பலன் தரும். நீதி தாமதமாகலாம், ஆனால் இறுதியில் நீதி வெல்லும்.  உங்கள் ஆசிர்வாதத்துடன் விரைவில் வெளிவருவேன்.  

அதுவரை சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைதியான போராட்டத்தை தொடருங்கள்.  தீமை வென்றாலும் நிலைக்காது, தற்காலிகமாக தோற்கடிக்கத் தோன்றினாலும் காலச் சோதனையில் நன்மையே வெல்லும்.  விரைவில் நன்மை தீமையை வெல்லும்.  அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் என சந்திரபாபு நாயுடு  ராஜமகேந்திரவரம் சிறையிலிருந்து கடிதம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *