சினிமாவை போல காரில் சீக்ரெட் ரூம் வைத்து அராஜகம் செய்யும் கேரள இளைஞர்கள்…!

வாகனங்களில் ரகசிய அறை வைத்து ஆயுதங்களுடன் நள்ளிரவில் வேட்டையாடு சென்ற கேரளா இளைஞர்கள்.  சுற்றி வளைத்து ஐந்து பேரை ஆயுதங்களுடன் பிடித்த வனத்துறையினர். ஒருவர் தப்பி ஓட்டம். வனச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது 40% வனப் பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள், காட்டெருமை உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் கேரளா மாநில பதிவு எண் கொண்ட ஜீப் மற்றும் இனோவா கார் இரண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு  இளைஞர்கள் ஆயுதங்களுடன் வனப்பகுதி சென்றதாக தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து பத்துக்கு மேற்பட்ட வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வனப் பகுதியில் வனத்துறையினரை பார்த்ததும் கேரளா இளைஞர்கள் தாக்க  முயற்சித்துள்ளனர். இருந்த போதும் சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் ஒரு இளைஞர் தப்பி ஓடி நிலையில் 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். 

அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெம்சீர், ஜோபின், சோஜன், முகமது ஆணில், போன்ற இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 விசாரணையில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து கத்தி, டார்ச்,  மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் அந்த  இரண்டு வாகனத்தில் ரகசிய அறை வைத்து பல வருடங்களாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் ஐந்து பேரை வன சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *