சட்டப்பிரிவுகளை மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்… வழக்கறிஞர் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை மத்திய அரசு திரும்பப் பெறக் கூறி தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.

 இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளுக்கும் உள்ள பெயரை மாற்றம் செய்து  மத்திய அரசு பாராளுமன்றத்தில் பாரதிய நியாய ஷன்ஹிதா 2023, பாரதிய நிஹ்ரிக் சுரஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷய அதிநயம் சட்டம் 2023 என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது. 

இதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மத்திய அரசு திருத்தம் செய்த மூன்று சட்டப் பிரிவுகளுக்கும் 100 ஆண்டுகளாக இருந்த சட்டப்பிரிவுகளை மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நீதிமன்ற வளாகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *