திருப்பதி மலைப்பாதையில் அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது…!

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறை சார்பில்  வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி நடை பாதையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி அன்று ஆந்திராவின் கர்னூல்  மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் கௌஷிக் பெற்றோருடன் நடைப்பாதையில் சென்றபோது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை கெளசிக்கை கவ்வி சென்றது. 

இதனை பார்த்த பெற்றோர் பொதுமக்கள் சிறுத்தையை விரட்டி சத்தம்போட்டதால்  அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவனை சிறுத்தை வனப்பகுதியில் காயங்களுடன் விட்டு சென்றது. இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சிறுவன் கெளவுசிக்கை தாக்கிய  சிறுத்தையை வனத்துறை வைத்த கூண்டில் பிடிக்கப்பட்டு பாக்ரா பேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி அன்று நெல்லூர் மாவட்டத்தை 6 வயது லட்ஷிதா என்ற சிறுமி பெற்றோருடன் பாதை யாத்திரையாக நடைப்பாதையில்  சென்றபோது  லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே  லட்ஷிதா தாக்கி சிறுத்தை கவ்வி சென்று தாக்கி கொன்று தின்றது. இதில் சிறுமி லட்ஷிதாவின் முகம் சிதைந்து பாதி முகத்துடன் சடலம் மறுநாள் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. 

இதனையடுத்து சிறுமி லட்ஷிதாவை கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக ஆபரேஷன் சிறுத்தை என்ற பெயரில் வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து மலைப் பாதையில் 350 இடங்களுக்கு மேல் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் இதில் 14 ம்தேதி வனத்துறை வைத்த  கூண்டில் சிறுத்தை சிக்கியது. அதனை ஸ்ரீ வெங்கடேஸ்வர உயிரியியல் பூங்காவில்  வைத்து லட்ஷிதாவை தாக்கி கொன்ற் சிறுத்தையா என தெரிந்து கொள்ள அதன் நகம், இரத்தம், முடி ஆகியவை சேகரித்து லட்ஷிதாவின் மரபனுவுடன் பிடிப்பட்ட சிறுத்தையின் உடலில் லட்ஷிதாவை சாப்பிட்டதற்கான தடயங்கள் மரபணுவில் கிடைக்கிறதா என ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதே நாளில் மற்றொரு சிறுத்தை பட்டபகலில் நடைப்பாதையில் நடமாடியது. இதனால் தொடர்ந்து குண்டு வைத்த கண்காணித்த நிலையில் இரண்டு நாட்களில் மீண்டும் மூன்றாவது சிறுத்தையும் பிடிப்பட்டு உயிரியியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அனைவரும் நிம்மதி அடைந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து திருப்பதி வெங்கடேஸ்வர பல்கலை கழக வளாகத்தில் உள்ள பொறியியல் துறை பிரிவு அருகே இரவில் சிறுத்தை நடமாட்டத்தை மாணவர்கள் பார்த்தனர். 

அதே சிறுத்தை நடைப்பாதை அருகே வந்து செல்வது கேமிராவில் பதிவானது. இதனால் தொடர்ந்து குண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கவும் தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஒருபுறம் சிறுத்தையை பிடிக்க ஒரு வாரமாக  வனத்துறையினர் பல்வேறு வியூகம் அமைத்து கூண்டு வைத்த நிலையில் கூண்டின் அருகே வரும் சிறுத்தை சிக்காமல் சுற்றி வந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை பக்தர்களை அச்சுறுத்தி வந்த நான்காவது சிறுத்தையும் நடைபாதையில் ஏழாவது மைல் அருகே கூண்டில் சிக்கியது. இதனால் ஆபரேஷன் சிறுத்தை திட்டம் நிறைவடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து வனவிலங்குகளிடமிருந்து பக்தர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத்துறை சார்பில் வழங்கும் அறிக்கையை வைத்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *