ஒரே நேரத்தில் 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்

Election

தெலங்கானா மாநிலத்தில் ஒரே நேரத்தில் 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் முதல்வர் சந்திரசேகர் ராவ் 

இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ள கே.சி.ஆர். மூன்றாவது முறை ஹார்டிக் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி தேர்தல் ஓட்டத்தில் போட்டியை தொடங்கியுள்ளது.  ஐதராபாத் தெலங்கானா பவனில்  சட்டசபை தேர்தலுக்கான  வேட்பாளர்களை  முதல்வர் கேசிஆர் ( சந்திரசேகர் ராவ் ) அறிவித்தார்.இதில் ஒரே நேரத்தில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். 

இந்த முறை நடைபெறும் தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் மட்டும்  கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இம்முறையும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறிய கேசிஆர் 7 தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ.களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. 

வரும் தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று ஹார்டிக் வெற்றியுடன் மூன்றாவது முறை ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.  ரங்கா ரெட்டி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் பிஆர்எஸ் மற்றும் மஜ்லிஸ் கட்சியுடன் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெறுவோ.மஜ்லிஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையிலான நட்புறவான சூழல் எதிர்காலத்திலும் தொடரும்.  

எம்எல்ஏக்கள் மட்டுமின்றி 17 எம்பி தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறினார். இதற்காக அக்டோபர் 16-ம் தேதி வாரங்கலில் சிம்ம கர்ஜனை மாநாடு நடத்தப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.  

அன்றைய தினம் வாரங்கலில் 10 லட்சம் பேருடன் மாபெரும் பேரணி நடத்தி அனைத்து சமூகத்தினரையும் கவரும் வகையில் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடப்படும் என்றார். அக்டோபர் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *