தமிழக ஓட்டுநர்களை இழிவாக பேசி, தாக்கும் கேரள குண்டர்கள்…

School Bus

கேரளா மாநிலத்தில் தமிழக சீப் டிரைவர் குண்டர்களால் தாக்குதல், விவசாய கூலி பெண் தொழிலாளர்களை இழிவாக பேசியும் தாக்க முயன்றதால் பெண் தொழிலாளர்கள் மத்தியில் வேலைக்கு செல்ல அச்சம்.

கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியார், குமுளி, கம்பமெட்டு, நெடுங்கண்டம், புளிய மலை, கட்டப்பனை உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகின்றது.

இந்த ஏலக்காய் தோட்டங்கள் தமிழகத்தை சேர்ந்த தேனி உத்தமபாளையம் கம்பம் கூடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சொந்தமானவை.

எனவே ஏலக்காய் தோட்டங்களில் நடைபெறும் விவசாய.வேலைகளுக்கு குறிப்பாக களை எடுக்க, பழம் எடுக்க கவாத்து வெட்ட, பூச்சி மருந்து அடிக்க, உரம் வைக்க போன்ற விவசாய வேலைகளுக்கு கம்பம், உத்தமபாளையம், கூடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான விவசாய ஆண், பெண் கூலிதொழிலர்கள் தினந்தோறும் ஜீப் மூலம் ஏல தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த கூலி தொழிலாளர்களை ஏலத்தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று வர கம்பம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வருகின்றது.

சனிக்கிழமை மாலை பணிகளை முடிந்துவிட்டு கேரள மாநிலத்தில் இருந்து கூலி பெண்களை ஏற்றி கொண்டு ஜீப்கள் தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருந்தபோது கேரளா மாநிலம் கம்பமெட்டு அருகே நடு ரோட்டில் இன்னோவா காரை நிறுத்தி கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் மதுபானம் அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

ஜீப்  செல்வதற்கு இடையூறாக இருந்ததால் ஜீப் டிரைவர் சதீஸ் வாகனத்தை ஒதுக்கி போடச் சொல்ல, மதுபானம் அருந்திய கும்பல் எங்கள் நாட்டில் வந்து எங்களுக்கு நீ என்னட செல்றது என்று கூறி ஜீப் டிரைவர் சதீஸ் யை தகாத வார்த்தையில் பேசி அடித்து, உதைத்தனர். மற்ற டிரைவர்கள் கேட்டதற்கு கும்பல் தாக்க முயன்றுள்ளது. மேலும் ஜீப்பில் வந்த தமிழக கூலி பெண் தொழிலாளர் டிரைவர் சதீஸ் யை காப்பற்ற முயன்றபோது பெண்களையும் இழிவாக பேசியும் அடிக்க முயன்று உள்ளது.

இந்த பிரச்சனை அறிந்த கேரள மாநிலம் கம்பமெட்டு போலீசார் டிரைவர் சதீஸ் புகார் பெற்று தாக்குதல் தடத்திய கும்பல் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் கம்பமெட்டு பகுதியில் தமிழக டிரைவர் மலையாள குண்டர்களால் தாக்கப்பட்டதும் தடுக்கச் சென்ற தமிழக கூலி விவசாய பெண் தொழிலாளர்கள் இழிவாக பேசி தாக்க முயன்றது கம்பம் கூடலூர் உத்தமபாளையம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 கேரள மாநிலத்திற்கு ஏல தேட்ட விவசாய பணிக்கு செல்லும் கூலி பெண் தொழிலாளர் மத்தியில் இச்செயல் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *