மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 20 பேர் பலி… 

மகரராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் குமார் உடலை விரைவாக கொண்டு வர தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் உறவினர்கள் வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி அருகே விஐபி நகரை சேர்ந்தவர் இளங்கோ இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு சசி மற்றும் சந்தோஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர் முதல் மகன் சசி கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இரண்டாவது மகன் சந்தோஷ் இன்ஜினியரிங் படித்து மும்பை தலைமையிடமாக கொண்டுள்ள வி எஸ் எல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் சந்தோசத்திற்கு திருமணமாகி ரூபி என்கிற மனைவியும், ஆத்வீக் என்கிற 5 வயதில் சிறுவனும், அனமித்ரா என்கிற ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் சந்தோஷ் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் விபத்தில் கிரேன் விழுந்ததில் 20 பேர் உயிரிழந்தனர் இதில் பணியில் இருந்த சந்தோஷ் படுகாயம் அடைந்து உயிரிழந்தார் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்று அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகுந்த சோகமாக அவரது குடும்பத்தினர் சந்தோஷ் உடலை காண எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

ஆனால் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னமும் பிரேத பரிசோதனைகள் செய்யாமல் இருப்பதாகவும் பிரேத பரிசோதனைகள் முடிந்த பிறகு கார்கோ விமான மூலம் உடன்களை எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஒருவேளை விமானம் கிடைக்கவில்லை என்றால் சாலை வழியாக கொண்டு வர முயற்சிக்கும் மேற்கொண்டிருப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சாலை வழியாக உடல்கள் கொண்டு வர குறைந்தது 22 மணி நேரம் ஆகும் என்பதால் தமிழக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இறந்தவர்களின் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதேபோல் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள் 

இது போல் உயர சம்பவங்கள் சமயங்களில் அந்தந்த மாநில அரசுகள் விரைவாக செயல்பட்டு இறந்தவரின் உடல்களை ஒப்படைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இனி இது போன்ற சம்பவங்கள் கட்டுமான பணிகள் மட்டுமல்லாமல் அமைத்து பணிகளிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *