மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஊர்வலமாக சென்று மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே பல நாட்களாக நடந்து வரும் மோதலின் உச்சமாக பழங்குடி பெண்களை நிர்வாணமாக சிலர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பெண்கள் அமைப்பினர், தன்னார்வலர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், ஒன்றிய  பாஜக அரசு பதவி விலக கோரியும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர்  இன்று வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் முன்பாக ஊர்வலமாக முக்கிய வீதிகளில்  வத்தலகுண்டு வட்டார தலைவர்கள் காமாட்சி கோகுல்நாத் குமரேசன் அவர்கள் தலைமையில் கடைவீதி மெயின் ரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர் அதனைத் தொடர்ந்து காளியம்மன் கோவில் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காளியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் 50  க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில்,  மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலவரம்  நடந்த போதும் அதை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்த  மத்திய பிஜேபி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *