தொடர் மழையினால் ஆற்றின் வெள்ள பெருக்கில் ரோட்டில் மீன்களை பிடிக்கும் மக்கள்

Fishing Festival

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து சாலைகளில் குதித்து வரும் மீன்களை வலைகளில்  பிடித்து செல்லும் பொதுமக்கள்

மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலத்தில்  தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் தெலுங்கானா மாநில முழுவதும் பல இடங்களில் ஆறு, சிற்றோடைகள், ஏரி, குளம் ,குட்டை என அனைத்தும் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.  பல இடங்களில் நீர்தேக்கங்கள் திறக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

ஒருங்கிணைந்த கரீம்நகர் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்குடன் மீன் வரத்தும் காணப்படுவதால், குளங்கள், குட்டைகள் ஓடைகளில் வரும் நீரில் மீன்களும் வருகின்றன.   சாலைகளில்   பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளப் பெருக்குடன் மீன்கள் அடித்து கொண்டு வருகிறது. ராமடுகு மண்டலத்தில் உள்ள வெலிச்சலாவில் நூற்றுக்கணக்கான மீன்கள் வந்ததால் அதனை  பொது மக்கள் கூட்டமாக வந்து பிடித்து செல்ல கூட்டம் அலைமோதியது.   

வலைகள் மூலம் மீன் பிடிக்ககூடிய நிலையில்  10 கிலோ முதல் 15 கிலோ வரை ஒவ்வொரு மீன்களும் எடை உள்ளதால்  வலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. ஒரே நேரத்தில் வலைவீசினால், இரண்டு பை மீன்கள் பிடிபடுகிறது. அனைத்து மீன்களையும் கொண்டு செல்ல சிறப்பு ஆட்டோக்கள் வரவழைக்கப்பட்டன.  கடைசியில் ஆட்டோக்கள் கூட போதவில்லை 10 மீன்களை ஆட்டோவில் போட்டால் நிரம்பி விடுகிறது.  பல்வேறு வகையான மீன்களை  பிடித்த நிலையில் மீன்பிடிப்பதை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் குவிந்தனர்.  

ஏராளமான மீன்களை கையில் பிடித்தபடி செல்ஃபி எடுத்தனர்.  இவ்வளவு பெரிய மீனை இதுவரை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.    இந்த வெள்ளத்தில் சிக்கிய மீன்களை கொண்டு செல்ல வியாபாரிகள் நேரடியாக மீன்பிடி பகுதிக்கு சென்று விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால்  அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் மீன் குழம்பு ருசி பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *