நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கானா அமைச்சர் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஸ்ட் பிள்ளையிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமனை தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் விமர்சித்துள்ளார். நாட்டுக்காக வரியாக நிறைய பங்களிக்கிறது. ஆனால், ஒவ்வொரு ரூபாய்க்கு 46 பைசா தான் எங்கள் மாநிலத்திற்கு திரும்பிக் கிடைக்கிறது. 

பிரதமர் மோடியின் போட்டோ எங்கே? ஆட்சியரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய  நிர்மலா சீதாராமன்!!

2020-21 ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ.46,117 கோடியை தெலுங்கானா அளித்தது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து ரூ.28,163 கோடி தான் கிடைத்தது என்று கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.

மேலும், ட்விட்டரில் தெலுங்கானாவிலிருந்து மத்திய அரசுக்கு வரிகள் கிடைக்கப் பெற்றதையும் திரும்பப் பெறப்பட்ட புள்ளி விவரங்களையும் ராமாராவ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *