இனி எங்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வரும்..! சொன்னது யார்..?

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செப்டம்பர் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாரத் பிராதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. திருநங்கைகளுக்கான தேசிய போர்ட்டலால் வழங்கப்பட்ட TG சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் TG நபர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். 

மூன்றாம் பாலினத்தவர் நல மசோதா இந்திய மேலவையில் நிறைவேறியது - BBC News தமிழ்

இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், பதிவு ஐடி அல்லது தேசிய TG போர்ட்டலில் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ் வரிசை எண்ணை வைத்திருக்கும் TG பயனாளி, PMJAY க்கான தற்போதைய நடைமுறையைப் பின்பற்றி, பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள எந்த ஒரு மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சை பெற முடியும். TG சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறை குப் பிறகு, தகுதியான விண்ணப்பதாரருக்கு சுகாதார அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், திருநங்கைகள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *