பாஜகவின் அற்ப மனநிலையை பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டும் –   ராகுல் காந்தி

பெண்களுக்கு எதிராக செயல்படும் குற்றங்களில், குற்றவாளிகளை ஆதரிப்பது பெண்களிடம் பாஜகவின் அற்ப மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

கடந்த 2002ல் குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை, வன்முறை கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல், மேலும் அப்பெண்ணின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அக்கும்பல் கொன்றது.

Rahul Gandhi Says "Onset of Dictatorship" In Attack On Government |  இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்த வழக்கில் 11 பேர் கைது செய்த நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  ராகுல் உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க எம்எல்ஏ-வை காப்பாற்றுவது, கத்துவா சிறுமி பலாத்கார வழக்கில் பலாத்காரம் செய்தவனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பலாத்காரம் செய்தவனுக்கு அரசு ஆதரவாக இருப்பது, குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்து கொண்டாடுவது, குற்றவாளிகளை ஆதரிப்பது எல்லாம் பெண்களை பற்றிய பா.ஜ.க வின் கீழ்த்தரமான எண்ணங்கள் குறிக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *