பீகார் அரசியல் மாற்றம்: 31 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு..!

பீகாரில் ஜனதா தளம் கட்சில் முதலமைச்சர் நிதிஷ்குமார்  தலைமை மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி கட்சி அமைச்சர்கள் 30 பேர் பீகார் சட்டசபையில் இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சர் பதவி ஏற்றனர். 

இதில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி கட்சியை சேர்ந்த 16 பேர் மற்றும் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறது. இதில் ஆர்.ஜே.டி கட்சி அமைச்சர்கள் இதற்கு முன் பிஜேபி வகித்த முக்கிய பதவிகள் ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பிகார் அமைச்சரவை விரிவாக்கம்- Dinamani

இதில் ஆர்ஜேடி தலைவர்களான தேஜ் பிரதாப் யாதவ், அலோக் மேத்தா, லலித் யாதவ், சுரேந்தர் யாதவ், குமார் சர்வ்ஜீத் ஆகியோர் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், ஜிதன் ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (ஹெச்ஏஎம்) க்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கட்சியும்  கூட்டணியில் உள்ளதால் அவர்களுக்கு இரண்டு அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி  ஜனதா தளம் கட்சியானது பிஜேபி ல் இருந்த விலகுவதாக  ஒருமனதாக அறிவித்தது. பிஜேபியில்  இருந்து விலகிய ஜனதா தளம்  ஆர்.ஜே.டி கட்சியுடன் கூட்டணி வைத்தது. மேலும் பீகார் மாநிலத்தின் எட்டாவது முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *