ஜம்மு காஸ்மீரில் விபத்து: ஆற்றில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 7 ITBP வீரர்கள் உயிரிழப்பு..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள  பஹல்காமில் உள்ள சந்தன்வாரி அருகே உள்ள ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறை சேர்ந்த 7 படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கம் பகுதியில் 2 போலீஸ் மற்றும் 37 எல்லை படை வீரர்கள் என 39 பேருடன் சென்ற பேருந்து  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சந்தன்வாரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Bus fell into river, six jawans died CB News | crazy Bollywood News Updates

இந்த விபத்தில் 7 படை வீரர்கள்  உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்களை அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் உள்ளவர்களை பஹல்காமில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார். அதில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சந்தன்வாரி ஆற்றில் பஸ் விபத்து ஏற்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். என்னுடைய வேண்டுதல் மற்றும் எண்ணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பம் பக்கமே உள்ளது. படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *