முன்னாள் அதிபர் டிரம்புக்கு சொந்தமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றல்..!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ- லஹு எஸ்டேட்டில் கடந்த எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரகசிய ஆவணங்களை எஃப்பிஐ கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார். இந்த சோதனை தொடர்பாகவும் சோதனைக்கான வாரண்ட் சோதனையில் கைப்பற்றப்பட்ட வரை குறித்த விவரங்களை எஃப்பிஐ சீலிடட் கவரில் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் | Tamil News Trump returning to political stage possible 2024 run

இந்த சிலிடட் கவரைப் பிரிக்க நீதித்துறை அனுமதித்ததை அடுத்து புளோரிடா நீதிபதி அந்த வாரண்ட் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய கவரை பிரித்தார். 

அதில், சோதனையின் போது அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *