ஊழியர்களுக்கு அதிர்ச்சி: சுந்தர் பிச்சை கொடுத்த புதிய டாஸ்க் என்ன..?

சிலர் கடினமாக உழைக்கவில்லை என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்கள் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஊழியர்களிடம் பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை உற்பத்தி திறனில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருந்து போதுமான உற்பத்தி கிடைக்கவில்லை என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற சவால்களை தடையாக இருக்கக் கூடாது. மாறாக, உங்கள் கவனத்தை ஆழப்படுத்தவும் நீண்ட கால வளர்ச்சிக்கு முதலீடு செய்யவும் வாய்ப்புகளாக காணுங்கள். இந்த சிக்கல் தீரும் வரை இந்த ஆண்டு முழுவதும் புதிய பணியமர்த்துவதை மெதுவாக முடிவு செய்துள்ளோம். 

இருப்பினும் பணியமர்த்தல் முற்றிலும் முடிக்கவில்லை. தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு நிறுவனம் தொடர்ந்து புதிய பணியமர்த்துதல் நடைபெறும். 

அமெரிக்காவில் $13 பில்லியன் முதலீடு: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு  | Google CEO Sundar Pichai focuses on job creation to spend 13 bn on  facilities - Tamil Gizbot

அவ்வாறு பணியமர்த்தப்படும் சிறந்த திறமைசாலிகள் நிறுவனத்துடன் நீண்ட காலம் இணைந்திருப்பதை உறுதி செய்வோம் என்றும் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், அதிக ஆக்ரோஷமான இலக்குகளை வைத்திருப்பதன் மூலம், அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதன் மூலம் இந்த இடம் உங்களுக்கானது இல்லை என்பதை நீங்கள் உணரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *