மகாராஷ்டிராவில் தொழிலதிபர் வீட்டில் நடந்த ரெய்டு..!! சிக்கியது  பல கோடி..?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மற்றும் அவுரங்காபாத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பிரபலமான இரு தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து அவுரங்காபாத், ஜல்னா உட்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் அந்த தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். 

இந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய ரெய்டு 8-ம் தேதி வரை நீடித்தது. ரெய்டில் ரூ.390 கோடிக்குக் கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

19 பணம் எண்ணும் மெசின்கள்... 180 கோடி ரூபாய் பறிமுதல் - வேட்டையில் சிக்கிய  கான்பூர் தொழிலதிபர் | 19 cash counting machines 180 crore rupees  confiscated Trapped Kanpur businessman ...

ரெய்டில் ரொக்கப் பணம் மட்டும் 58 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 32 கிலோ தங்கமும் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணி முடிக்கவே 13 மணி நேரம் பிடித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ரூ.14 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் பவளமும் இந்த ரெய்டில் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்த 120 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

100 கோடி ரூபாய் மதிப்பு பினாமி சொத்து ஆவணங்களும் ரெய்டில் பிடிபட்டுள்ளன. ரெய்டு நடத்தப்பட்ட இரு தொழிலதிபர்களும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தலா ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கியிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *