சாரி பாஸ் உங்க லுங்கி கலர் எங்களுக்கு பிடிக்கல..!! நீங்க படம் பார்க்க முடியாது..!

வங்காளதேசம் நாட்டின் ஒரு முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனம் ஸ்டார் சினிப்ளெக்ஸ் திரையரங்குக்கு கடந்த சில தினங்களுக்கு முன்  ஒருவர் லுங்கி அணிந்து சென்றுள்ளார். அப்போது லுங்கி அணிந்து வந்தால் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று கூறி திரையரங்கு ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். 

இதனால் அவர் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அவருக்கு டிக்கெட் வழங்க மறுக்கப்பட்டதை அருகில் நின்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடவே, இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியது.

Sharjah bans Asian 'lungi' in public places: report

இதையடுத்து, லுங்கி அணிந்து வந்த ரசிகர்கள் டிக்கெட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்டார் சினிப்ளெக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டார் சினிப்ளெக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் பாகுபாடு காண்பிப்பதில்லை.

லுங்கி அணிந்திருப்பதால், ஒருவருக்கு டிக்கெட் வழங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை. எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை கண்டு ரசிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமாக தவறான புரிதலின் விளைவாக இருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *