சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – நிதின் கட்கரி

நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதின் கட்கரி நாடு முழுவதும் 5 கோடியே 56 பாஸ்ட்டேக்குகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும். இதனால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் வாகன நெரிசல் குறையும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு பதில் மாற்று முறையில் வசூலிக்க இரண்டு வழிகளை அரசு பரிசீலித்து வருகிறது என கூறப்படுகிறது. வாகனங்களில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ் கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவோ அல்லது கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு மென்பொருள் தயாரிப்பு கட்டணத்தை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களில் புதிய வழிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்களுக்கு சுங்க வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.