அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்..!! தீவிர ஆலோசனையில் மன்சுக் மாண்டவியா..!!

கேரளாவில் 5 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் நிலையில் மக்கள் கடும் அச்சத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது குறித்து விளக்கம் அளித்த அவர் குரங்கு அம்மை நோய் கேரளாவில் கண்டறியப்பட்ட சுட்டிக்காட்டினார். 

முதல் நோயாளி அடையாளம் காணப்படுவதற்கு முன்பாகவே குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Mandaviya dismisses vaccine shortage charge, says states given advance  visibility on stocks | India News - Times of India

அதோடு, கேரளாவில் முதல் நோயாளி அடையாளம் காணப் பட்டதும் மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி மாநில அரசுக்கு தேவையான உதவிகளை அளிக்க தொடங்கியதோடு, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

குரங்கு அம்மை குறித்து அச்சம் கொள்ள கூடாது என வலியுறுத்தியவர் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் இந்த பிரச்சனையை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார்.

குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி தயாரிப்பதற்கான பணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…