கேரளாவில் தொடரும் கனமழை..!!  எச்சரிக்கும் கேரள முதல்வர்..!! 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மலையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா முழுவதும் இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் எல்லோ அலெர்ட் விடப்பட்டது. இன்று வயநாடு மாவட்டம் தவிர எஞ்சிய 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் கோட்டயம், இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

பொன்முடி, கல்லாறு, மங்கலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.