நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து வருகிறது – அமித்ஷா

பீகாரில் நடக்கும் தேசிய செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, வரும் 2024 பொதுத் தேர்தல் மோடி தலைமையில் நடைபெறும் என்றார். வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நேற்று பீகாரில் நடந்த பாஜகவில் தேசிய செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் தேசபக்தி நிறைந்த சூழல் நாடு முழுவதும் உருவாக்க வேண்டும்.

2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர். அவர் மூன்றாவது முறையாக பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படுவார். நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏழை குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக அமர்த்தினோம்.

அதேபோல் பழங்குடியினர் மகளான திரௌபதி முர்முவை நாட்டின் ஜனாதிபதியாக்கி உள்ளோம் என்றார். பாஜகவுக்கு எதிராக போராட தேசிய அளவில் எந்த கட்சியும் இல்லை. மாநில பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்  என்றார். 

Leave a Reply

Your email address will not be published.