தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்குவது பெருமையாக உள்ளது – வெங்கையா நாயுடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. தமிழ்நாடு காவல் துறையிடம் ஜனாதிபதி கொடி இன்று ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள், இந்நாள் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பிறகு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் கொடி அளிக்கப்பட்டது. இதன்மூலம், தென்னிந்தியாவில் ஜனாதிபதி கொடியைப் பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது.
உயர்ந்த அங்கீகாரத்தை தமிழக காவல்துறை பெற்றிருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.கொடி ஒப்படைக்கப்பட்ட நிலையில், வானத்தில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவம் குடியரசுத் தலைவரின் கொடி.இதுவரை 10 மாநிலங்களின் காவல்துறைக்கு மட்டுமே குடியரசு தலைவரின் கொடி வழங்கப்பட்டது.
தென் மாநிலங்களில் முதல் மாநிலமாகவும், இந்தியாவின் 11-வது மாநிலமாகவும் தமிழ்நாட்டில் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்பட்டது,சிறப்பான சட்டம் – ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட பல அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்படுகிறது.