இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்கிறது – தேசிய பாதுகாப்பு அமைப்பு

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல மதங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு அமைதி மற்றும் ஒற்றுமை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவும், அமைதியை  குழைக்கவும் ஒரு சிலர், மதம் மற்றும் சித்தாந்தம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன. அந்த சக்திகள், மதம் மற்றும் சித்தாந்தம் என்ற பெயரில் மோதலை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றன. 

அஜித் தோவல்... இந்திய ஜேம்ஸ்பாண்டின் சாகசங்களும் சர்ச்சைகளும்! | Meet Ajit  Doval, India's real-life James Bond

அவர்களின் முயற்சி ஒருபோதும் நாட்டை பாதிக்காது. ஆனால்  நாட்டிற்கு வெளியே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை விட வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். நமது நாட்டில் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக செயல்படுவது பெருமை அளிக்கிறது என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.