மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவகர்கள் முதல் கூட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி எந்த ஒரு சமூகத்திற்கும் நீதித்துறை அணுகுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு விரைந்து நீதி வழங்குவது முக்கியம் என குறிப்பிட்டார்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறையில் உள்ள விசாரணை கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்.
விசாரணை கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்ட அதிகாரிகள் ஏற்கலாம் என தெரிவித்தார். தலைமை நீதிபதி பேச்சு இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரமணா பேசும் போது, நமது தேசத்தின் பலமே நமது இளைஞர்கள். உலகில் வாழும் இளைஞர்களின் 5ல் ஒரு இளைஞர் இந்தியாவில் தான் வசிக்கிறார். வெறும் 3 சதவீத இளைஞர்கள் திறன்மிகு பணியாளர்கள் உள்ளனர்.
சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை அகற்றும் குறிக்கோளுடன் நவீன இந்தியா உள்கட்டமைக்கப்பட்ட உள்ளது என கூறினார். இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே நீதி அமைப்பை அணுக முடியும் என்பது உண்மை இல்லை என தலைமை நீதிபதி பேசினார்.