குடியரசுத் தலைவர் குறித்து பேசியது தவறுதான் –  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கோரி உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆமாம், ராஷ்ட்ரபதியை பார்க்க உள்ளோம். இல்லை ராஷ்ட்ரபத்னி, அனைவருக்கும்’ என தெரிவித்தார்.

I accept my mistake, will apologise to President Murmu personally: Adhir  Ranjan | India News – India TV

அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. நேற்று மக்களவை கூடியதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆதிர் ரஞ்சனின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த பாஜக எம்பிக்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.தவறுதலாக அவ்வாறு பேசி விட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று கூறி இருந்தார். அதே நேரத்தில், மன்னிப்பு என்ற கேள்வியே எழவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், குடியரசு தலைவர் வுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.