சோனியா காந்தி குறித்து தரக்குறைவாக பேசியது தவறு – காங்கிரஸ் 

சோனியா காந்தி குறித்து தரக்குறைவாகப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. 

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர்கள் நிர்மலா சீதராமனும், பியூஷ் கோயலும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.

Rashtrapatni' remark row: Sonia Gandhi slams Smriti Irani in Parliament;  says 'don't talk to me'

இதனால் உறுப்பினர்களுக்கும் பாஜக உறுப்பினர்களுக்கு இடையே அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பியூஷ் கோயலும் பேசிய பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவையின் கண்ணியத்திற்கு விரோதமாக பேசிய நிர்மலா சீதாரானும் பியூஷ் கோயலும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.