ஹரியானா பெண்களுக்கு இனி பேருந்துகளில் இலவச பயணம்..!!

தமிழகத்தை தொடர்ந்து ஹரியானாவிலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு. 

ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, ஆகஸ்ட் 10ம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்...? சட்டமன்றத்தில்  அமைச்சரின் புதிய பதில்..!

பெண்களுக்கு ரக்ஷாபந்தன் பரிசை வழங்கி, ஹரியானா அரசு இந்த ஆண்டும் ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் இலவச பயணம் வசதியை வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.