இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் சிஇஓ யார் தெரியுமா?

Vijayakumar

HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் கடந்த ஆண்டு 123.13 கோடி ரூபாய் ($16.52 மில்லியன்) அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையிலேயே மிகப்பெரிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் கடந்த ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரி C. விஜயகுமாருக்கு ரூ. 123.13 கோடி ($16.52 மில்லியன்) ஊதியமாக வழங்கியதாக நிறுவனம் வார இறுதியில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் சாப்ட்வேர் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை விஜயகுமார் பெற்றுள்ளார். விஜயகுமாரின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு இன்சென்டிவ் பலன்களை உள்ளடக்கியது என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கையில் அந்நிறுவனத்தின் சிஇஓவான சி.விஜயகுமார் HCL America Inc. நிறுவனத்திடமிருந்து 16.52 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெறுகிறார் எனக்குறிப்பிட்டுள்ளது. அதன் படி, ஆண்டு அடிப்படைச் சம்பளமாக $2 மில்லியனும், வேரியபிள் பே 2 மில்லியன் டாலரும் பெறுகிறார். கூடுதல் சலுகைகள் மற்றும் பிற நன்மைகளுக்காக 0.02 மில்லியன் வழங்கப்படுகிறது. 12.50 மில்லியன் டாலரை நீண்ட கால இன்சென்டிவ் ஆகப் பெறுகிறார். ஆக மொத்தம் மார்ச் 31ம் ஆண்டுடன் நிறைவடையும் நிதியாண்டு கணக்கு படி, $16.52 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறுவது தெரியவந்துள்ளது. இந்த தொகையானது இந்திய மதிப்பில் ரூ. 123.13 கோடி ஆகும்.

“2021-22 நிதியாண்டில், மைல்கற்களின் சாதனைக்காக இரண்டு ஆண்டுகளின் இறுதியில் செலுத்தப்பட்ட LTI (நீண்ட கால ஊக்கத்தொகை) USD 12.5 மில்லியன் பெறப்பட்டதைத் தவிர, அவரது ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, 2019-20 நிதியாண்டிற்கு USD 6.25 மில்லியன் மற்றும் FY 2020 க்கு USD 6.25 மில்லியன், அதாவது மார்ச் 31, 2021 அன்று முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலே உள்ள LTI எனப்படும் இன்சென்டிவ் மட்டுமே கூடுதலாகும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீண்ட கால ஊக்கத்தொகையை இணைக்காவிட்டால், விஜயகுமாரின் சம்பளம் 4.13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.