மகாராஷ்டிராவில் பரபரப்பு..!! கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம்..!!

மகாராஷ்டிராவில் விமானப் பயிற்சியின் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா கட்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை நிலத்தில் இன்று காலை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்த நிலையில் அதிஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளார்.  கார்வர் ஏவியேஷன் செஸ்னா 152 விமானம் VT-ALI ஒரு தனி கிராஸ்-கன்ட்ரி விமானம்  உள்நோக்கிச் செல்லும் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது என கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பயிற்சி விமானி பாவிகா ரத்தோட்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் பாவிகா நல்வாய்ப்பாக ரத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…