நாட்டில் வாழும் விவசாயிகளின் நிலை கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசின் திட்டம் குறித்து கண்டனம் தெரிவித்து உள்ளார். ஒன்றிய அரசு குறித்து அவ்வப்போது  விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி தற்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் பிரதமரின் விவசாயிகள் சித்திரவதை திட்டம்.

இறந்த விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் ஏதும் வழங்கவில்லை. நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு இல்லை என பிரதமர் மோடி குறித்து விமர்சித்த ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார். இறந்தவர்கள் குறித்து தரவுகள் இல்லை.

நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் அரசு நாட்டில் கஷ்டப்படும் ஏழை விவசாயிகளுக்கு இல்லை என்பது மோடி அரசின் உண்மை தன்மையை காட்டுகிறது. பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ₹40000 கோடி லாபம்.

2022 இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி இருக்க வேண்டும். ஆனால் தொல்லை தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது என விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…