ராஜஸ்தானில் குவாரி அமைப்பதற்கு எதிராக போராடிய நபர் தீக்குளித்து தற்கொலை..!!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராடிய நபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த 500 நாட்களுக்கும் மேலாக சுவாமி விஜய் தாஸ் என்பவர் குவாரி அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமி விஜய் தாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது தற்கொலை சம்பவம், ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில் பாரத்பூரில் உள்ள பசோபா கிராமத்தில் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பகுதியில் குவாரி அமைக்க சன்யாசிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சுவாமி கிருஷ்ணருடன் தொடர்புடைய இடம் என்பதால், இங்கு குவாரி அமைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு மற்றொரு சந்நியாசி இங்குள்ள மொபைல் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். 

அவரை சமாதானப்படுத்தி இறக்கிவிட்டேன். தற்போது சுவாமி விஜய் தாஸ் என்ற சந்நியாசி, தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.