44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி..!! சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு, உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

செஸ் ஒலிம்பியாட்.. சென்னை டூ மாமல்லபுரம்.. இலவச பேருந்துகள் இயக்கம் என  அறிவிப்பு! | Tamil Nadu Tourism has announced that free buses will be run  on the occasion of the Chess Olympiad ...

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.

மேலும் கடந்த ஜூலை 19ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

இதையடுத்து பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் சென்னை வருவதாக பிரதமர் தகவல் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published.