ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆடி கிருத்திகை திருநாளான இன்று மக்‍களுக்‍கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

முருக பெருமாளுக்கு உகந்த தினமான இன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனையொட்டி முருகப்பெருமான் ஆலயங்களில் பக்‍தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆடி கிருத்திகை  முன்னிட்டு தமிழில் ஆடி கிருத்திகை நன்நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்றும் நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.