ஹரியானாவில் பயங்கரம்..!! குப்பை தொட்டியில் இருந்த போலீஸ் அதிகாரி உடல்..!! 

ஹரியானாவில் கல்குவாரி குற்றங்களை தடுக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய் லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பி சுரேந்திர சிங் உடல் குப்பை தொட்டி இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். 

இது குறித்து போலீஸ் அதிகாரி மோகன் சிங் கூறும்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்த பின் அவர் அங்கு சென்றுள்ளார். சட்டவிரோத குவாரி பொருட்களை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் நிற்காமல் போலீசார் மீது மோதி, ஏற்றி விட்டு சென்றார் என கூறியுள்ளார். இதுகுறித்து சுரங்கத்துறை உள்பட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு யாரிடமிருந்து வந்தது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். மேலும் துணிச்சலான, நேர்மையான அதிகாரியான சுரேந்திராவின் கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அவருடன் பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய அதிகாரியிடம், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சில மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்பு அரியானா போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில், டிஎஸ்பி சுரேந்தர் சிங் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது என்றார்.  

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…