மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை..!! உயரும் பலி எண்ணிக்கை..!!

மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. கட்சிரோலி மற்றும் கோந்திய மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புனே, கோலாப்பூர், நாசிக் என மொத்தம் 28 மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குஜராத் மாநிலத்தில் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டாப்பி மாவட்டத்தில் உள்ள உப்பை அணை திறக்கப்பட்டது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள ஹிராகூட் அணை நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் விளைநிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் உஜ்ஜயினி மாவட்டத்தில் மகித்பூர் வடத்திற்குட்பட்ட நாராயண பலூடா கிராமம் அருகே தரைப்பாலம் விழியே காட்டாட்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது. காரில் இருந்தவர்கள் வெளியே வந்து கயிறு மூலம் காரை இழுக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.